அன்று, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் ஒரு பொதுவான விஷயம் மற்றும் ரசிகர்கள் அதைப் பற்றி பெரிய விவாதம் மேற்கொள்வார்கள். ஆனால் பரபரப்பான போட்டிகளைத் தவிர, திரைக்குப் பின்னால் பல விஷயங்கள் கொஞ்சம் பதற்றமாகவே இருக்கும். உதாரணமாக, மைதானத்திற்கு வெளியே இறுக்கமான பாதுகாப்பு.
2004ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்ற போது இருந்த நிலைமையை அப்போதைய ஐசிசி டாப் நடுவர் சைமன் டாஃபல் விவரிக்கிறார். 2004 பாகிஸ்தான் தொடர் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்டது. இந்தியா டெஸ்ட் தொடரையும் வென்றது, ஒருநாள் தொடரையும் வென்றது.
இந்நிலையில் அந்தத் தொடர் கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு சைமன் டாஃபல் கூறும்போது, “இந்தியா-பாகிஸ்தான் தொடர் மற்ற தொடர்களைக் காட்டிலும் அதிக ஆய்வுக்குட்படுத்தப்படும். ஏனெனில் நாற்காலி நிபுணர்கள் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்வார்கள்.
எப்போதும் நம்மைச் சுற்றி, வீரர்களைச் சுற்றி, எந்திரத் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு அதிபருக்குப் பாதுகாப்பு அளிப்பது போல் இறுக்கமான பாதுகாப்பு வளையம் இருக்கும். இதில் நம் முன்னே இருக்கும் பணியில் கவனம் செலுத்துவது கடினம். நான் கஷ்டப்பட்டு என் பணியை செய்தேன்.
என் பணியில் கூடுதல் கவனம் எடுத்து ஒரு சமயத்தில் ஒரு பந்தின் மீதான கவனம் என்றவாறு பணியை கவனத்தில் கொள்வது கடினம், ஆனாலும் செய்தேன்.” என்றார்.
அதாவது நடுவருக்கே இப்படியென்றால் வீரர்களுக்கு எத்தனை டென்ஷன், இருதரப்பு வீரர்களுக்கும்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் நடுவர் சைமன் டாஃபல்.
இந்தியாவும் பாகிஸ்தானும் மொத்தம் 200 முறை விளையாடியுள்ளன. இந்தியா 70 வெற்றிகளையும் பாகிஸ்தான் 87 வெற்றிகளையும் பெற்றுள்ளது. அவர்கள் கடைசியாக 2012-13 இல் இந்தியாவில் 3 ODIகள் மற்றும் 2 T20I ஐ உள்ளடக்கிய இருதரப்பு போட்டிகளில் விளையாடினர். டி20 தொடரை 1-1 என சமன் செய்தது, ஒருநாள் போட்டியில் 2-1 என தோல்வியடைந்தது. அப்போதிருந்து, ஐசிசி போட்டிகளில் மட்டுமே அணிகள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.