இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்- தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு – News18 Tamil


இந்தோனேஷியாவில் இன்று தொடங்கும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. 11வது ஆசிய ஹாக்கிப் போட்டித் தொடர் இன்று இந்தோனேசியாவில் தொடங்குகிறது, இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா.

ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா,

பி-பிரிவு: மலேசியா, தென்கொரியா, ஓமன், வங்காளதேசம்.

ஒவ்வொரு அணியும் அந்தந்தப் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒவ்வொரு முறை விளையாட வேண்டும், இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப் 2 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.
2-வது சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த தொடரில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புவனேஷ்வரில் நடக்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். ஆனால் உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா ஏற்கனவே தகுதி பெற்று விட்டது .

இந்திய அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா ஆவார். இவர் ஓய்வு அறிவித்து விட்டு பிறகு முடிவை மாற்றிக் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், எஸ்.கார்த்தி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இன்று ஆடும் லெவனில் இருப்பார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 13 ஆட்டங்களில் 12-ல் இந்தியா வெற்றி பெற்றதால் இந்திய அணியின் பக்கம் வெற்றி சாதகம் உள்ளது. 3 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணியிலும் நிறைய இளம் வீரர்களைக் கொண்டிருப்பதால் அவர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 மற்றும் செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இன்றைய நாளில் நடக்கும் மற்ற ஆட்டங்களில் மலேசியா-ஓமன், தென்கொரியா- வங்காளதேசம், ஜப்பான்- இந்தோனேசியா அணிகள் சந்திக்கின்றன.

இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: பங்கஜ் குமார் ராஜாக், சூரஜ் கர்கேரா

டிஃபென்டர்ஸ்: நிலம் சஞ்சீப் செஸ், யஷ்தீப் சிவாச், அபிசேக் லக்ரா, பிரேந்திர லக்ரா (கேப்டன்), மன்ஜீத், டிப்சன் டிர்க்கி

மிட்பீல்டர்கள்: விஷ்ணுகாந்த் சிங், ராஜ் குமார் பால், மரீஸ்வரன் சக்திவேல், ஷேஷே கௌடா பிஎம், பவன் சிம்பிரன் கவுடா பிஎம், அபரன் சுதேவ், எஸ்வி சுனில் (துணை கேப்டன்), உத்தம் சிங், எஸ் கார்த்தி

முன்கள வீரர்கள்: பவன் ராஜ்பர், அபரன் சுதேவ், எஸ்.வி.சுனில் (துணை கேப்டன்), உத்தம் சிங், எஸ்.கார்த்தி

இந்திய போட்டிகள் விவரம்:
23 மே 2022 – இந்தியா v/s பாகிஸ்தான்
24 மே 2022 – இந்தியா v/s ஜப்பான்
26 மே 2022 – இந்தியா v/s இந்தோனேஷியா

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube