இதையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக்கில் ) தென்கொரியாவுடன் நேற்று மோதியது. இந்தப் போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர்.
சூப்பர் 4 சுற்றின் முடிவில் மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்றன. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் மலேசியா, தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.