கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 03 ஜூன், 2022 07:42 AM
வெளியிடப்பட்டது: 03 ஜூன் 2022 07:42 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 03 ஜூன் 2022 07:42 AM

புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கி சுடலில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசஷின் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உக்ரைனின் செர்ஹி குலிஷை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வன்னில் குசலே 10-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலகக் கோப்பை தொடரில் ஸ்வப்னில் குசலே பதக்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும். இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ள இந்தியா பதக்கத்தில் 5-வது இடத்தில் உள்ளது.