கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 04 ஜூன், 2022 07:04 AM
வெளியிடப்பட்டது: 04 ஜூன் 2022 07:04 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 04 ஜூன் 2022 07:04 AM

பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடலில் மகளிர் பிரிவில் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவேளையில் இந்திய ஆடவர் அணியும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
அஜர்பைஜானின் பாகு நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில், டென்மார்க்கின் ரிக்கே இப்சனுடன் விளையாடினார். இதில் அஞ்சும் மவுத்கில் 12-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணிகள் பிரிவில் ஸ்வப்னில் குசலே, தீபக்குமார், கோல்டி குர்ஜார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 7-17 என்ற கணக்கில் குரோஷியா அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் பெற்ற பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.