வீராங்கனையை மிரட்டிய இந்திய பயிற்சியாளர் – News18 Tamil


இந்திய சைக்கிள் போட்டி வீராங்கனை ஒருவருக்கு பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா என்பவர் மிரட்டல் விடுத்ததாகவும் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி இல்லையேல் வாழ்க்கையையே காலி செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக இந்திய ஸ்போர்ட்ஸ் அதாரிட்டிக்கு வீராங்கனை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஸ்லாவேனியாவில் இருக்கும் இந்திய சைக்கிள் வீரர்கள் குழுவையே இந்தியாவுக்கு திருப்பி அழைத்து விட்டனர்.

மேலும் தன் உயிருக்கே அவர் விடுக்கும் மிரட்டல் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தன்னை அடிக்கடி தன் அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாகவும் பயிற்சிக்கான மசாஜ் என்ற பெயரில் கண்ட இடங்களில் கை வைப்பதாகவும் இந்த சைக்கிள் வீராங்கனை புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்றில் வந்த செய்திகளின்படி, ஸ்லாவேனியாவில் கடந்த மாதம் நடந்த பயிற்சி முகாமின் போது தன்னை அருகில் வரும்படி அழைத்து தன் மேல் கைவைப்பதாகவும் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கோச் ஆர்.கே.ஷர்மா கட்டாயப்படுத்தியதாகவும் தான் மறுத்ததால் தன் வாழ்க்கையையே காலி செய்து விடுவேன் என்றும் கூறியதாகவும் இந்திய ஸ்போர்ட்ஸ் அதாரிட்டியிடம் அந்த வீராங்கனை புகார் அளித்துள்ளார். அதாவது தன் ஆசைக்கு இணங்கவில்லை எனில் தேசிய திறன் வளர்ப்பு மையத்திலிருந்து இவரை விரட்டி விடுவேன் என்றும் தேசிய பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா மிரட்டியுள்ளார். தனக்கு கீழ்படியவில்லை எனில் தெருவில் காய்கறி விற்க வேண்டியதுதான் என்றும் கூறிஉள்ளார்.

இதையடுத்து ஸ்லாவேனியா முகாமில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார் அந்த சைக்கிள் வீராங்கனை, உடனே ஆர்.கே.சர்மா இந்த வீராங்கனை வீட்டுக்கு போன் செய்து இவருக்கு ஒன்றும் வரவில்லை, எனவே திருமணத்துக்கு ஏற்பாடு செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார். ஷர்மா இன்று இந்திய அணியுடன் ஸ்லாவேனியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இருந்து வருகிறார்.

இவர் 2014 முதல் கோச்சாக இருக்கிறார். இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

சைக்கிள் வீராங்கனையின் புகார் திங்களன்று SAI ஆல் ஒரு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது, அதில் அவர் “உடனடியாக” “அவளுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக” அழைத்து வரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது – மேலும் “விஷயத்தை விசாரிக்க” ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதாவது “முதன்மையின் அடிப்படையில் இந்த விவகாரம்கையாளப்படுகிறது” என்று விளையாட்டு அதாரிட்டி கூறியுள்ளது.

திங்களன்று ஒரு தனி, இந்திய சைக்கிள் ஆட்டக் கூட்டமைப்பு (CFI) அடையாளம் கண்டு, புகார்தாரின் பக்கம் நிற்பதாகவும் தனி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளையாட்டுகளில் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் என்பது பாலியல் ரீதியானதுதான் இது வெளியே வந்த ஒரு சம்பவம் இன்னும் சொல்ல முடியாமல் தவிக்கும் வீராங்கனைகள் பலதரப்பட்ட விளையாட்டுகளில் இருக்கவே செய்கின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube