79 வயதான அவரின் தோற்றம் கொஞ்சம் கூட மாறவில்லை, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இசையுடன் செலவழித்து தன்னை புத்துணர்வாக வைத்திருக்கிறார் ராஜா. ஆத்மார்த்தமான மெலடி அல்லது துள்ளல் என எதுவாக இருந்தாலும், இளையராஜாவின் ரசிகர்களுக்கு அவையெல்லாம் பெரும் விருந்தாக இருக்கின்றன. ஒரு உதவியாளராக இருந்து, இசைஞானி ஆனது வரை அவரைப்பற்றிய அறிய தகவல்கள் இங்கே…
மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் உதவியாளர்
பாவலர் வரதராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது இளையராஜாவின் தாயார், இளையராஜாவை அவரது மூத்த சகோதரர் பவலார் வரதராஜனின், இசை நிகழ்ச்சிகளில் உதவியாளராக அனுப்பினார். இளையராஜா தனது சகோதரரை ஊக்குவிப்பதற்காக பாடல்களைப் பாடுவார், மேலும் அவரது சகோதரரின் வழிகாட்டுதலின் கீழ் தனது இசை பயணத்தைத் தொடங்கினார்.
பொன்மலை மற்றும் திருவெறும்பூர் இசை நிகழ்ச்சிகள்
தனது ஆரம்பகால வாழ்க்கையில், பொன்மலை மற்றும் திருவெறும்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு. அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இன்று இளையராஜாவின் ஃபேவரிட்டாக உள்ளதோடு, அதில் மறக்க முடியாத பல நினைவுகளையும் அவர் கொண்டாடுகிறார்.
சொந்த சகோதரியின் மகள் மணந்தார்
தனது சொந்த சகோதரியின் மகள் ஜீவா ராஜய்யாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இசைஞானி இளையராஜாவை போலவே, அவரது குழந்தைகள் அனைவரும் திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள்.
கிறிஸ்தவராக பிறந்து இந்து மதத்திற்கு மாறினார்
இளையராஜா கிறிஸ்தவராகப் பிறந்து, பின்னர் இந்து மதத்திற்கு மாறினார். அதே நேரத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறார். ரமண மகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகை ஆகியோரின் தீவிர பக்தர் இளையராஜா.
முதலில் இசைக் குறிப்புகளை எழுதி பின்னர் அதை வாசிக்கும் மிகச் சிலரில் ஒருவர்
தங்களது இசைக் குறிப்புகளை முதலில் எழுதி அதை இசைக்கும் மிகச்சில இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவர். அவரது மகன் யுவன் சங்கர் ராஜா உட்பட பெரும்பாலான இசைக்கலைஞர்கள் இதை தலைகீழ் வரிசையில் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா பல ஆண்டுகளாக இதே பாணியைப் பின்பற்றி அதில் பல ஆத்மார்த்தமான பாடல்களையும் வழங்கியுள்ளார்.
இளையராஜாவுடன் பணியாற்ற மறுத்த எல்.ஆர்.ஈஸ்வரி
இளையராஜா ஒருமுறை பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியை வைத்து தனது பாடல் ஒன்றை ரெக்கார்ட் செய்ய விரும்பினார். ஆனால் அவர் இப்போது தான் தொடக்கத்தில் இருக்கிறார் என்று கூறி பாட மறுத்துவிட்டார் ஈஸ்வரி. அதற்குப் பிறகு, இளையராஜா தனது பாடல்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியுடன் ஒருபோதும் பணியாற்றவில்லை.
இசையமைப்பாளருக்கு உயரமான கட்-அவுட்
‘முரட்டு காளை’ பட வெளியீட்டின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல, இளையராஜாவுக்கும்மிக உயரமாக கட்-அவுட் வைக்கப்பட்டது. இப்படி கட்-அவுட் வைக்கப்பட்ட முதல் இசையமைப்பாளரும் இளையராஜா தான். இவருக்கு தலைமுறைகளை கடந்து பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை நிராகரித்த மாஸ் ஹீரோ?
@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விலையுயர்ந்த ஆடைகளை அணிவதில் விருப்பம்
இளையராஜா இப்போதெல்லாம் பெரும்பாலும் வெள்ளை குர்தா மற்றும் வேஷ்டி அணிந்துள்ளார். ஆனால் அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், விலையுயர்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவதையே மிகவும் விரும்பினார்.
தேசிய விருதுகளை மறுத்தவர்
இந்தியாவில் ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு, தேசிய திரைப்பட விருதுகள் தான். அதைப் பெறுவது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் காரண பலங்களுக்காக இளையராஜா இரண்டு முறை தேசிய விருதை மறுத்துள்ளார்.
‘மேஸ்ட்ரோ’ மற்றும் ‘இசைஞானி’ பட்டங்கள்
இளையராஜா உலகின் மிக அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர். அவர் இந்திய மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு சிம்பொனி இசைக்குழுவால் ‘மெஸ்ட்ரோ’ மற்றும் பிரபல அரசியல்வாதியும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியால் ‘இசைஞானி’ ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.