சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் | சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் – News18 Tamil


இந்த உலகில் அடிப்படையான உணவு, உடை உறைவிடத்திற்காக தான் மக்கள் அள்ளும் பகலும் உழைத்து ஓடுகின்றனர்.அதற்காக அவர்கள் செய்யும் வேலைகள் பலவிதம். வண்ணான், தச்சன், மூட்டை தூக்குபவன், எழுத்தாளன், விற்பனையாளர் போலவே சிலர் தங்கள் உடலைப் பொருளாக்கி விற்று வாழ்கின்றனர். தன் உடல் – தன் விருப்பத்தின் பேரில் வணிகம் செய்து வாழ்ந்தால் அவர் பாலியல் தொழிலாளர் ஆவர்.

சூழல்:

உலக அளவில் நிலவிவரும் பஞ்சத்தாலோ, குடும்ப சூழலாலோ, தன் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட தீர்க்க முடியாத சூழலோ தான் ஒருவர் இப்படி ஒரு முடிவெடுக்கிறார். அது அவரது சுய ஒப்புதலின் பேரில் ஏற்படுமாயின் அது அவரது சுயவேலை ஆகிறது. ஆனால் அதுவே ஒருவர் வற்புறுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டால் அது ஆள் கடத்தல் கணக்கில் கொள்ளப்படும். அது சட்டப்படி குற்றம்.

சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் வந்த கதை:

ஜூன் 2, 1975 அன்று, பிரான்சில் சுமார் 100 பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வேலையைக் குற்றப்படுத்துவதற்கு எதிராக லியோனின் செயிண்ட்-நிசியர் தேவாலயத்தில் கூடினர். 1975 ஆம் ஆண்டு போராட்டம் ஒரு தேசிய வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்தது, ஆனால் எந்த சீர்திருத்தத்தையும் இயக்க முடியவில்லை.பாலியல் தொழிலாளர்கள் தேவாலயத்தை எட்டு நாட்கள் ஆக்கிரமித்துள்ளனர், பின்னர் அவர்கள் காவல்துறையினரால் அகற்றப்பட்டனர்.

அப்போது தான் பாலியல் தொழிலாளிகள் மீது உலகளாவிய பார்வைபட்டது. அவர்கள் செய்வது ஒரு தொழில் அவ்வளவே. தொழிலைகொண்டு ஒரு மனிதனை கண்ணியமின்றி நடத்துவது புரியத்தொடங்கியது. அவர்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்நாள் வழங்கலாயிற்று. அந்த அக்கினிக்குஞ்சு ஆண்டுதோறும் அனலாகிறது.

ஜெர்மன் மொழியில், இது ஹுரெண்டாக் (வேசி தினம்) என்று அறியப்படுகிறது. ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில், இது தியா இன்டர்நேஷனல் டி லா டிராபஜடோரா செக்சுவல், சர்வதேச பாலியல் தொழிலாளி தினம் எனப்படுகிறது.

இந்தியாவில் பாலியல் தொழிலாளர்கள் நிலை:

முகலாயர் காலத்தில் பாலியல் தொழில் பழக்கம் வந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கூறும். தமிழகத்தில் மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில் தேவனடியார்கள் என்று தனித்து மதிக்கப்பட்ட நடனக் கலைஞர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட கதைகளும் கேட்டிருப்போம். சிலம்பின் மாதவியும் அவ்வாறே.

சுதந்திரம் அடைந்த பின்னர் 1965 இல் சீதா (ஒழுக்கக்கேடான கடத்தல்கள் தடுப்புச் சட்டம்) இயற்றப்பட்டது. இதில் பாலியல் தொழிலை ஒடுக்க முயற்சித்தனர். ஆனால் ரகசியமாக அசுரர் வேகத்தில் இத்தொழில் வளர ஆரம்பித்தது. உலகின் மிகப்பெரிய வர்த்தக ஊராக இந்தியா மாறத்தொடங்கியது. 1980 கலீல் சீதா சட்டம் திருத்தப்பட்டு விருப்பமின்று பாலியல் தொழில் செய்வதை மட்டும் சட்டவிரோதமாக அறிவித்தது.

மாதவிலக்கு பற்றிய உரையாடல் ஏன் அவசியம்..? ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?

சமமாகும் குழிகள்:

அதே காலத்தில் கொல்கத்தாவின் மாநில காப்பீட்டு நிறுவனம் 250 பாலியல் தொழிலாளிகளுக்கு காப்பீடு செய்து கொடுத்தது. காலம் அவர்களை மதிக்கத் தொடங்கியது.

29/05/2022 இல் உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அதுவும் தொழில் தான்.வீணாக காவலர்கள் அவர்களை இழிவு படுத்தக்கூடாது. மேலும் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க 6 உத்தரவுகளை பிறப்பித்தது. “பாலியல் தொழிலாளர்கள் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு.

prostitutes1

வயது மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் அனைத்து வழக்குகளிலும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பாலியல் தொழிலாளி வயது வந்தவர் மற்றும் சம்மதத்துடன் பங்கேற்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தால், காவல்துறை தலையிடுவதையோ அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும், அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கு உரிமை உள்ளது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழிலை வைத்து கண்ணியம் வருமென்றால் மனிதன் எங்கே வாழும்?

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube