சென்னையில் அடுத்தாண்டு பருவமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் பணி முடிக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


பூந்தமல்லி: சென்னை பெருநகர மாநகராட்சி 146வது வார்டு மதுரவாயல் ஆலப்பாக்கம் மகாத்மா காந்தி தெரு, ராஜீவ் காந்தி நகர், திருமுருகன் நகர் பகுதிகளில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதன்பிறகு மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கடந்த பருவமழையின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறியப்பட்டது.

இந்தாண்டு பருவமழையை எதிர்கொள்ள வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது பணி தொடங்கப்பட்டு இருப்பதால் வடிகால் அமைக்கும் பணி முழுவதுமாக நிறைவடைய வாய்ப்பு இல்லை. சென்னையில் அடுத்தாண்டு பருவமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் பணி முடிக்கப்படும். மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 72,82,689 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 64 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். வரும் 12ம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube