சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்…

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் காம்பேக்ட் சைஸ் செடான் ரக வாகனமாகும். வென்டோ காரை ரீபிளேஸ் செய்யும் வகையில் இக்கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இக்காரின் உற்பத்தி பணிகளை மிக சமீபத்திலேயே புனேவில் உள்ள சக்கன் உற்பத்தி ஆலையில் தொடங்கியது. இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் இரண்டாவது ஃபோக்ஸ்வேகனின் தயாரிப்பு இதுவாகும். முதலில் இத்திட்டத்தின்கீழ் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி காரையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி உள்ளிட்ட வாகன மாடல்களுக்கு போட்டியாகவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்காரை தனது எம்க்யூபி ஏ0 இன் (MQB A0 IN) பிளாட்பாரத்தை தழுவி ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரம் இந்தியாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

காரின் உட்பக்கம் கருப்பு மற்றும் பீஜ் கலரில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்கோடா ஸ்லேவியா காரில் இடம் பெற்றிருப்பதைப் போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் 10 அங்குலத்தில், தொடுதிரை, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன் ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட காரையே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 11.22 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கார் மாடலின் உச்சபட்ச விலையே ரூ. 17.92 லட்சம் ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இருவிதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் இவையே அந்த ட்ரிம்கள் ஆகும். டைனமிக் லைன் ட்ரிம்மில் கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் டாப் லைன் என்கிற கூடுதல் தேர்வுகளில் விர்டுஸைப் பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், பெர்ஃபார்மன்ஸ் லைன் ட்ரிம்மில் ஜிடி லைன் என்கிற ஒற்றை தேர்வு மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இவற்றின் விலை விபரம் இதோ:

Virtus Dynamic Line 1.0 L TSI
Variant Price
Comfortline MT ₹11,21,900
Highline MT ₹12,97,900
Topline MT ₹14,41,900
Highline AT ₹14,27,900
Topline AT ₹15,71,900
Virtus Performance Line 1.5 L TSI Evo
Variant Price
GT Plus DSG ₹17,91,900

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

எஞ்ஜின் விபரம்:

டைனமிக் லைனில் கிடைக்கும் அனைத்து வேரியண்டுகளிலும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ, 3 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

பெர்ஃபார்மன்ஸ் லைனில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது. இரு எஞ்ஜின்களிலும் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

பாதுகாப்பு அம்சங்கள்:

போக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களாக 40க்கும் மேற்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாண்டர்டு அம்சமாக ட்யூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மும்முனை ஆங்கர் சீட் பெல்டுகள், ரியர் பாரக்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், மல்டி கொல்லிசன் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேசன் வார்னிங் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

நிற தேர்வுகள்:

ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் விர்டுஸ் காரை பெற்றுக் கொள்ள முடியும். வைல்டு செர்ரி ரெட், கேன்டீ வெள்ளை, கார்பன் ஸ்டீல் கிரே, கர்குமா மஞ்சள், ரெஃப்ளக்ஸ் சில்வர் மற்றும் ரைசிங் ப்ளூ மெட்டாலிக் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும். காரை கவர்ச்சியாக்கும் வகையில் போல்டான டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

சொன்னபடியே விற்பனைக்கு கொண்டு வந்துட்டாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இத்துடன், குரோம் ஸ்ட்ரிப், மெல்லிய இழை போன்ற எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டே டைம் ரன்னிங் லைட் உள்ளிட்ட அம்சங்கள் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட கூடுதல் அம்சங்கள் பெர்ஃபார்மன்ஸ் லைனில் வழங்கப்பட்டுள்ளன. மஸ்குலர் ஃபிரண்ட் பம்பர், பெரிய ஏர்டேம் மற்றும் எல்இடி ஃபாக்லேம்ப், ஜிடி பேட்ஜ் உள்ளிட்டவை கூடுதல் சிறப்பு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube