IPL 2022 Delhi Capitals vs Mumbai Indians Pant not reviewing catch-behind decision against Tim David costs the match himself , ஐபிஎல் 2022, டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – கத்துக்குட்டி ரிஷப் பண்ட்


ஐபிஎல் 2022, 69வது போட்டியில் நேற்று வெற்றி பெற்றால் பிலே ஆஃப் வாய்ப்பு நிச்சயம் என்ற நிலையில் சொல்லி வைத்து உதை வாங்கியது டெல்லி கேப்பிடல்ஸ், ரிஷப் பண்டின் தொடர் கத்துக்குட்டி கேப்டன்சிதான் காரணம். நேற்று வெற்றியில் டிம் டேவிட் என்ற மலை போன்ற மனிதன் 11 பந்துகளில் 34 ரன்களை விளாசியது மும்பையே மாறியது, ஆனால் அவர் 0-வில் இருந்த போது எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார், களநடுவர் நாட் அவுட் கொடுக்க, ரிஷப் பண்ட் ரிவியூ செய்யத் தவறினார். இது மாபெரும் தவறு என்று பேசுபொருளாகியுள்ளது.

159/7 என்று டெல்லி கேப்பிடல்ஸ் ரோவ்மென் போவெலின் அதிரடி மற்றும் ரிஷப் பந்தின் பொறுப்பான 39 ரன்களில் எட்டியது. தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள். டேவால்ட் ப்ரெவிஸ் 3 சிக்சர்களுடன் 33 பந்தில் 37 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 17 பந்தில் 31.

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்சுக்கு தேவை 33 பந்துகளில் 65 ரன்கள். அப்போது அதிரடி மன்னன் டிம் டேவிட் 0 நாட் அவுட். ஷர்துல் தாக்கூரின் முதல் பந்தை அவர் எட்ஜ் செய்ய கேட்ச் ஆனது. களநடுவர் தபன் சர்மாவுக்கு காது கொஞ்சம் வீக், நாட் அவுட் என்றார். உடனே ரிவியூ கேட்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் 2 ரிவியூவும் பாக்கி உள்ளது, இப்போது கேட்காமல் எப்போது கேட்பார் ரிவியூவை? அந்த நடுவர் நோ-பால் கொடுக்காததற்கு அணியையே திருப்பி அழைத்த ‘மாவீரன்’ ரிஷப் பண்டின் மூளை இப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்று தெரியவில்லை.

ரிவியூ கேட்கவில்லை, டேவிட் அவுட் என்பது ரிவியூவில் கிளீன் ஆக தெரியவர, எல்லோருக்கும் கடும் ஏமாற்றம், தான் ஒரு கத்துக்குட்டி என்று நிரூபித்து விட்டார் ஒரு விக்கெட் கீப்பருக்கு அது எட்ஜ் என்று தெரியவில்லை? அதன் பிறகு என்ன? எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது. 10 பந்துகள்தான் ஆடினார் டிம் டேவிட், வெங்கலக் கடையில் யானை புகுந்தது என்பார்களே அப்படி ஒரு துவம்சம். 2 பவுண்டரி 4 சிக்ஸ் 34 ரன்கள் மேட்ச் மும்பை பக்கம் மாறியது.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கணினி லக் இன்டெக்ஸ் கூறுவதின் படி இந்த ரிவியூ கேட்கமைதான் டெல்லி வெளியேற்றத்துக்குக் காரணம். ஏனெனில் டிம் டேவிட்டின் 10 பந்து 34 ரன் இல்லை மற்ற வீரர்கள் இதே 10 பந்தில் 17 ரன்கள்தான் எடுத்திருப்பார்கள். அதுவும் 5 பந்துகள் மீதமிருக்கையில் மும்பை வென்றிருப்பதைப் பார்க்கும்போது ரிஷப் பண்ட் கத்துக்குட்டித் தனமாகக் கேப்டன்சி செய்ததுதான் பெருந்தவறாகப் போனது.

இதனால் மைனஸ் ரன் ரேட்டில் ஆர்சிபி போன்ற ஒரு அணியாகவே தோற்றமளிக்காத ஒரு அணி பிலே ஆஃப் சென்றுள்ளது, ஆனால் ஆர்சிபியின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, ​​அதாவது குஜராத் முதல் முறை, லக்னோ முதல் முறை, ராஜஸ்தான் ராயல்ஸ் நீண்ட காலத்துக்குப் பிறகு கோப்பை ஆஃப் நுழைவு, ஆகவே ஆர்சிபி ஐபிஎல் 2022 கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube