இது தேவையா? தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்த நடிகர்… விளாசும் நெட்டிசன்ஸ்!


பிரபல நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல முகங்கள்

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டுள்ளார் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா.

கால் தூசுக்கு சமம்

samayam tamil

ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரஹ்மானையே தனக்கு யாரென தெரியாது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். மேலும் பாரத ரத்னா விருதெல்லாம் தனது தந்தையின் கால் தூசுக்கு சமம் என்று பேசியும் ரணகளப்படுத்தினார். இப்படி நந்தமுரி பாலாகிருஷ்ணா பேசிய சர்ச்சை விஷயங்கள் ஏராளம்.

சர்ச்சைகள்

samayam tamil

இன்றளவும் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. அதேநேரத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். தனது கட்சி தொண்டரையே அடித்தது, போட்டோ எடுக்க முயன்ற ரசிகரை அடித்தது, பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என தொடர்ந்து வருகிறார்.

தூங்கிய குழந்தை

samayam tamil

இந்நிலையில் தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி நந்தமுரி பாலகிருஷ்ணா செல்பி எடுத்தது விவாதப் பொருளாகியுள்ளது. அதாவது இந்துபூர் பகுதியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர் மன்ற தலைவர் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றார் பாலகிருஷ்ணா. அப்போது ரசிகர்களும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் அவருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

குழந்தையை அடித்து

samayam tamil

பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். இதையடுத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் பாலகிருஷ்ணா. அப்போது ரசிகர் ஒருவர் குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தை அசந்து அப்பாவின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. இதனைக் கவனித்த நந்தமுரி பாலகிருஷ்ணா அந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக்கொண்டார்.

இது தேவையா?

samayam tamil

தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி பாலகிருஷ்ணா செல்பி எடுத்தது தற்போது விவகாரமாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தைக்கு நீங்கள் யார் என்றே தெரியாது, அதை அடித்து எழுப்பி செல்பி எடுக்க வேண்டியது அவசியம் என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குழந்தைகளிடமும் இப்படித்தான் நடந்துகொள்வீர்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube