பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்… இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

உலக புகழ்பெற்ற மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லா (Tesla)-வும் ஒன்று. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது இந்தியாவில் நுழையும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அலுவலகத்தை நாட்டில் அமைத்தது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

கர்நாடகாவில் காட்சியளித்த கார்களின் படங்கள்

இதைத்தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தன் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வரியைக் குறைக்குமாறு இந்திய அரசுக்கு டெஸ்லா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்நிறுவனம், தனது சீன உற்பத்தி ஆலையில் தயாரிக்கும் எலெக்ட்ரிக் கார்களையே இந்தியா கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இங்கிருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கே வரி குறைப்பை செய்யுமாறு டெஸ்லா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்திய அரசு நிறுவனத்தின் கோரிக்கை ஏற்க மறுத்துவிட்டது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

இதனால், நிறுவனத்தின் இந்திய வருகை தற்போது இழுபறியில் உள்ளது. இருப்பினும், இந்த நிலை ஒரு சிலரை டெஸ்லா மின்சார கார் ஆசைக்கு துளியளவும் தடையாக அமையவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஓர் நபர் டெஸ்லாவின் ஓர் தயாரிப்பை பிரைவேட்டாக இறக்குமதி செய்திருக்கின்றார். இறக்குமதி செய்யப்பட்ட காரின் படம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

டெஸ்லாவின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான ‘மாடல் ஒய்’ (Model Y)-யையே பெங்களூருவைச் சேர்ந்த நபர் இறக்குமதி செய்தியிருக்கின்றார். இந்த வாகனம் எவ்வளவு சிறப்பு வசதிகள் கொண்டது என்பது தெரிந்தால் நிச்சயம் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே செல்வீர்கள். மேலும், இறக்குமதி செய்வதற்கு ஒர்த்தான வாகனம் என நீங்களே கூறுவீர்கள். ஏனெனில் அந்தளவிற்கு மிக சிறப்பான தயாரிப்பாக அது உள்ளது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

டெஸ்லாவின் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக மாடல் ஒய் உள்ளது. இந்த காரையே இந்தியாவில் களமிறக்க டெஸ்லா பதிவு செய்திருக்கின்றது. முன்னதாக நிறுவனம் அதன் குறைந்த விலை தயாரிப்பான மாடல் 3-யை விற்பனைக்குக் கொண்டு வர இருந்தது. இந்த செடானை ஓரங்கட்டிய டெஸ்லா இந்திய சாலைகளில் மாடல் ஒய்-யை பரிசோதனைக்கு உட்படுத்தியது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

இந்த மாடலையே தற்போது பெங்களூருவைச் சேர்ந்தவர் வாங்கியிருக்கின்றார். இது உலக சந்தையில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒன்று பெர்ஃபார்மன்ஸ் என்ற பெயரிலும், மற்றொன்று லாங் ரேஞ்ஜ் என்கிற பெயரிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. லாங் ரேஞ்ஜ் எனும் தேர்வில் கிடைக்கும் வேரியண்ட் அதிக ரேஞ்ஜை தரக் கூடிதாகக் காட்சியளிக்கின்றது. அது அதிகபட்சமாக ஓர் முழுமையான சார்ஜில் 524 கிமீட்டரையும், டாப் ஸ்பீடாக மணிக்கு 217 கிமீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

ஆனால், பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டோ ஓர் முழுமையான சார்ஜில் 487 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும். அதேநேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீட்டராக உள்ளது. இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். ஆனால், முன்னதாக பார்த்த லாங் ரேஞ்ஜ் வேரியண்ட் இந்த வேகத்தை எட்ட 4.8 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும்.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

இந்த காரை அலங்கரிக்கும் விதமாக பல சிறப்பு விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 18 அங்குல அலாய் வீல் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேவேலையில், பெர்ஃபார்மன்ஸ் தேர்வை 21 அங்குல அலாய் வீலுடன் வழங்குகின்றது. இக்காரின் உட்பக்கம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

பிரைவேட்டாக இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் கார்... இம்போர்ட் செய்யுற அளவுக்கு ஒர்த்தானதா இந்த கார்?

Source: CarCrazyIndia

இதைத்தொடர்ந்து, 15 அங்குல தொடுதிரை இக்காரின் டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளது. டெஸ்லா மாடல் ஒய் காரை ஐந்து மற்றும் 7 இருக்கைகள் தேர்வு பெற்றுக் கொள்ள முடியும். பெங்களூருவாசி வாங்கியிருக்கும் இந்த டெஸ்லா மாடல் ஒய் எத்தனை இருக்கைக் கொண்ட வாகனம் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இதேபோல், டெஸ்லா நிறுவனத்தின் வருகையும் தற்போது கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube