நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி ஐயர் பேட்டி – தமிழ் செய்திகள்


இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த ஐயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நயன்தாரா திருமணத்திற்கு 20 சிவாச்சாரியார்கள் வந்திருந்ததாகவும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி பொருத்தம் மிகவும் பொருத்தமாக இருந்ததாகவும் திருமணத்தை நடத்தி வைத்த ஐயர் கூறியுள்ளார்.

nv090622 10

திருத்தணி, வடபழனி, மயிலாப்பூர், காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் சிவாச்சாரியார்கள் வந்திருந்தார்கள் என்றும், அவர்கள் முன்னிலையில் நல்ல முன்னேற்பாடுடன் ஒரு குறையும் இல்லாமல் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்றும் ஐயர் தெரிவித்தார்.

nv090622 7

மேலும் இன்று காலை 8 மணிக்கு முறைப்படி அனைத்து பூஜைகளும் ஆரம்பமாகி மந்திரம் உச்சரித்து, திருமுறை பாராயணம் செய்து, மேளதாளத்துடன் இந்து முறைப்படி திருமணம் நடந்தது என்று ஐயர் கூறினார்.

nv090622 8

ரஜினிகாந்த், ஷாருக்கான், சரத்குமார் உட்பட பல திரையுலக பிரமுகர்கள் வந்திருந்தார்கள் என்றும், திருமணம் செய்து வைத்த எங்களுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் மிகுந்த மரியாதை கொடுத்தார்கள் என்றும், எங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் கூறினார்.

nv090622 9

மேலும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி மிகவும் பொருத்தமாக இருந்தது என்றும் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள் என்றும் அவர் கூறினார்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube