jai bhim real rajakannu Raghava Lawrence given rs 5 lakhs : ஜெய்பீம் உண்மை நாயகன் குடும்பத்திற்கு நடிகர் லாரன்ஸ் நிதி உதவி!


ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜாக்கண்ணு மனைவி பார்வதி குடும்பத்தினருக்கு நடிகர் லாரன்ஸ் 5 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார்.

ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் ராஜாக்கண்ணு என்பவரின் வாழ்க்கையை படமாக்கினர். இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், ராஜாகாண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்தார். ஆனால் தமிழக அரசு அவருக்கு வீடு கட்டித்தர முன் வந்தது. அதை தமிழக முதல்வரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ராஜாகண்ணு குடும்பத்தினருடன் ராகவா லாரன்ஸ்

இதன் காரணமாக நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித்தர ஒதுக்கிய தொகையை அவருக்கும், அவருடைய வாரிசுகளுக்கும் கொடுக்க முடிவெடுத்தார். அதன்படி பார்வதி மற்றும் இரண்டு மகன்கள், மகள்கள் ஆகியோரின் அலுவலத்திற்கு வர வைத்து, வீடு கட்ட ஒதுக்கிய 5 லட்சம் தொகையை, 4 பேருக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு உதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதை கவனத்தில் கொண்டு வந்த பத்திரிகையாளர்களுக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் ரியல் ராஜகண்ணு ராகவா லாரன்ஸ் ஜெய்பீம் ராஜகண்ணு மனைவி பார்வதி அம்மா சூர்யா படத்திற்கு 5 லட்சம் கொடுத்தார் ஜெய்பீம்

ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கினார்.

நடிகர் லாரன்ஸ் இதேபோல சிலருக்கு உதவி செய்துள்ளார். குறிப்பாக ஜல்லிக்கட்டு சமயத்தில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த இளைஞனின் குடும்பத்திற்கு இலவசமாக வீடு கட்டி தந்துள்ளார். மேலும் புதுக்கோட்டையில் பல ஆண்டுகளாக ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துவரும் ஒருவருக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube