ஜூன் 4: ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினம்!


ஐக்கிய நாடுகளால் ஆகஸ்ட் 19, 1982 அன்று அறிவிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த உலகத்தில் படிப்பு, மார்க், ரேங்க், கேம்பஸ், வேலை, பிரச்சனை, சம்பளம், டென்ஷன், என்று எந்தக் கவலையும் இல்லாமல் விளையாட்டு, மகிழ்ச்சி மட்டுமே ததும்பிவாழும் பருவம் தான் குழந்தைப்பருவம். இந்த மனிதப்பிறவியில் கவலையே இல்லாத பட்டாம்பூச்சி போல் சிறகடித்து வாழும் வயது அது .

அந்த வயதில் கற்றல் திறனும், உணர்தல் திறனும் அதிகம் இருக்கும். அந்த வயதில் நாம் எதைக் கற்கிறோமோ அது பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். அதனால் தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அறங்களைக் கதைகளாகச் சொல்லி வளர்க்கிறோம்.

அதேபோன்று அந்த வயதில் அவர்களுக்கு ஏதேனும் பயம் ஏற்பட்டால் அதுவும் அவர்களை வாழ்நாள் முழுவதும் வரும். மெல்லிய பூப்போல் திகழும் காலம் அது. நாடுகளுக்கு இடையே போர், உள்நாட்டுக் கலவரம், உள்ளூர் சண்டை என்று எது வந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களும் தான். சங்ககாலத்தில் போருக்கு முன்னர் அந்த நாட்டின் பசுக்களை, பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டு தான் போர்தொடுப்பர்.ஆனால் இன்றைய காலத்தில் போரின் தங்குதல்களே இவர்களை நோக்கி உள்ளன.

2011 இந்தியா பாக்கிஸ்தான் சண்டைகளில் எல்லையில் உள்ள பள்ளிக்கூடங்களே இலக்காக அமைந்திருந்ததைப் பார்த்தோம். இப்படியான நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மன மாறுதல்கள், தாக்கங்கள் அவர்களின் வாழ்க்கையே திசை மாறும்.

  • வன்முறை மீதான அவர்களின் ஈர்ப்பை அதிகப்படுத்தலாம். வன்முறையால் தான் நினைத்த காரியத்தை முடிக்க முடியும் என்று நம்பிவிடலாம். தங்கள் வாழ்க்கையை வன்முறையின்பால் கொண்டு செல்வர்.
  • வன்முறை மீதான பயத்தை விதைத்துவிடும். சண்டை வரும் சூழல் வந்தாலே அதை எதிர்கொள்ள தைரியமின்றி ஓடி ஒழியும் எண்ணம் முளைத்துவிடும்.
  • சண்டை என்றால் வெறும் ஆயுதத்தாக்குதல் மட்டும் இருக்காது. சண்டை ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் அத்துமீறல்கள் நடக்கும்.
  • கடத்தல், உடலை காயப்படுத்துதல்,பாலியல் தொல்லைகள் என்று பலவும் நடைபெறும் சாத்தியங்களுண்டு.
  • அந்த பிஞ்சு வயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானால், வளரும் போது எதிர்ப்பாலினத்தின் மேல் ஒரு பயம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
  • இந்த சமூகத்தில் சாதாரணமாக வாழவே சிரமப்படுவர். மனிதர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுவர்.

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினம் வரலாறு:

1982 லெபனான் பாலஸ்தீன் போரில் பெண்கள், குழந்தைகள் என பலர் தீவிரமாக பாதிக்கப்பட்டனர்.போர் நிகழும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது, மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 250 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர். இந்தக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் துன்பங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் இன்னும் அதிகமான நடவடிக்கைகள் தேவை என்பதை ஐ.நா உணர்ந்தது. மரணம், பாலியல் வன்முறை, கடத்தல், மனிதாபிமான அணுகல் மறுப்பு மற்றும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் உட்பட பல தீங்குகள் உள்ளன.

International Sex Workers Day : பாலியல் தொழிலாளர்களுக்கான சம உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது யார்..?

அது குறித்து ஆகஸ்ட் 1982 இல் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்புச் சபையில், உறுப்பு நாடுகள் விவாதித்தன. குழந்தைகளின் உரிமைகள் குறித்த 51/77 தீர்மானத்தை சபை ஏற்றுக்கொண்டது.

அதன்மூலம் ‘உலகம் முழுவதும் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான தவறான பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுபவிக்கும் வலியை ஆவணப்படுத்தி அவர்களைப் பாதுகாக்கும்’ குறிக்கோளைக் கையில் எடுத்தது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐ.நா.வின் கொள்கையை இந்த நாள் உறுதிப்படுத்துகிறது.

1960455853சமீப ஆண்டுகளில், போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) அறிக்கைகளைத் தொடர்ந்து – குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்முயற்சிகளுடன் பணிபுரிந்து வருகிறது.

வன்முறை பெரும்பாலும் நீண்ட கால உடல் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அது முதிர்வயதைத் தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கிறது, UNODC உலகளவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையின் பின் விளைவுகளால் உலகம் ஆண்டுக்கு டிரில்லியன்களை இழக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube