கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் விக்ரம் அடுத்த பாகத்தில் ராம்சரண் தேஜா – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும் என தெரிகிறது. ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கடைசி ஐந்து நிமிடங்களில் வந்து அடுத்த பாகத்திற்கான ஆரம்பத்தை தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் ராம்சரண் தேஜாவை சந்தித்து தான் ஒரு கதை கூறியதாகவும் இணைவோம் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய நிலையில் அந்த படம் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ramcharan vikram 10062022m1

‘விக்ரம்’ படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அறிமுகமான நிலையில் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் பேரனாக வரும் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் ராம்சரண் தேஜா மற்றும் சூர்யா ஆகிய கேரக்டர்கள் நேருக்கு நேர் மோதும் கேரக்டர்களா? அல்லது இந்த இரண்டு கேரக்டர்களில் எதுவும் சஸ்பென்ஸை லோகேஷ் வைத்திருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குகிறாரா? அல்லது ‘விக்ரம்’ அடுத்த பாகத்தை படத்தை இயக்குகிறாரா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube