Kamalhaasan: கமலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு..இந்த வாரம் பிக் பாஸ் தொகுப்பாளர் யார் ? வெளியான தகவல்..! – இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது பற்றி ரசிகர்கள்


உலகநாயகன்

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பின் அவர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. மேலும் கமல் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என செம பிஸியானார். எனவே கமல் இனி படங்களில் நடிப்பது கடினம் என சிலர் பேசி வந்தனர். அந்த நேரத்தில் தான் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் விக்ரம் படத்தில் நடிப்பதாக அறிவித்தார் கமல்

விக்ரமின் வெற்றி

95752609

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விக்ரம் படத்தினால் புது உத்வேகத்துடன் காணப்பட்டார் கமல். இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் உலகநாயகன்

பிசி

95752618

விக்ரம் படத்திற்கு பிறகு கமல் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படம் பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து கமல் எடுத்த முயற்சிகளால் படம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து கமல் மணிரத்னம் இயக்கத்தில் தன் 234 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமலுடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கமல். இவ்வாறு பிசியாக வலம் வரும் கமல் பல படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது

உடல்நலக்குறைவு

95752650

தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் கமலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கமல் சென்னியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருக்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களில் கமல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அவ்வாறு கமல் தொகுத்து வழங்கமுடியவில்லை என்றால் ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்பு இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என சிலர் கூறிவருகின்றனர். இருப்பினும் அதற்குள் கமல் குணமடைந்து நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார் என தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube