ஓடிடி வெளியீடாக அண்மையில் வெளியான ரிலீஸ் ஆன இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பலரும் பாராட்டினர். அதனை தொடர்ந்து மகேஷ் பாபு ஜோடியாக நடித்த ‘சர்காரு வாரி பட்டா’ படம் வெளியானது.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை. நடிப்பின் மீது எனக்குள்ள ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கும் முன்பு நினைத்துக் கொள்வேன். .
அப்போதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான திருப்தி கிடைக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் எனக்குள்ள நடிகையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு காட்ட முடியும். நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும்”. இவ்வாறு கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.