கோலிவுட் அப்டேட்ஸ் | சுனைனாவின் த்ரில்லர், ஹாட் ஸ்டாரில் ‘O2’ மற்றும் சில | கோலிவுட் புதுப்பிப்புகள்


சுனைனா நடிக்கும் த்ரில்லர் படம் ‘ரெஜினா’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் படம் வெளியாகிறது. எல்லோ பியர் புரொடக்ஷன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிக்கிறார். படத்துக்கு அவரே இசையமைத்துள்ளார். பவன் கே.பவன் ஒளிப்பதிவு செய்துள்ள படம் மூலம் தமிழுக்கு வருகிறார் மலையாள இயக்குநர் டொமின் டி சில்வா.

”இது ஸ்டைலிஷான த்ரில்லர் படம். கணவனை கொன்றவர்களை பழிவாங்கும் பெண்ணின் கதை. சாதாரண இல்லத்தரசி, அசாதாரண விஷயங்களை எப்படி சாதிக்கிறார் என்கிற திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும்” என்றார் இயக்குநர். படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ஹாட் ஸ்டாரில் ‘O2’

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘O2’.நயன்தாரா, ரித்விக், லீனா, ஆர்என்ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி நடித்துள் ளனர். விக்னேஷ் ஜி.எஸ்.இயக்கியுள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது. ஒரு தாய் தனது 8 வயது மகனுடன், விபத்தில் சிக்கும் பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை, பேருந்தில் சிக்கிய மற்றொரு பயணி குறிவைக்க, மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பது கதை.

படம் பற்றி இயக்குநர் விக்னேஷ் கூறும்போது, ​​”நயன்தாரா என் மீது முழு நம்பிக்கை வைத்து இதில் நடித்தார். அவர்தான் படத்தின் ஆக்சிஜன். வலிமையான பெண்களுக்கு இப்படம் சமர்ப்பணம்” என்றார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, ​​”இதன் கதை சுவாரஸ்யமானது. ஒரு தேடல் உள்ள இது போன்ற கதையில் நயன் தாரா நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம். படம் ஓடிடியில் வருவது நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவு” என்றார்.

சூர்யாவுடன் மீண்டும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. சூர்யா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தரமான திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கும் தமிழ் ரசிகர்கள் தயங்கியதே இல்லை.

அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் ‘விக்ரம்’படத்தையும் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். தம்பிகள் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பன் வினோத் என வீரமிக்க நடிகர் படை இந்த வெற்றியின் முக்கிய காரணங்கள். கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்கை அதிரவைத்த அன்பு தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதை செய்தார்.

16546763592006

அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை, அடுத்து இணையும் படத் தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் ‘விக்ரம்’ படத்தின் 3-ம் பாகத்தில் இணைய இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார்.

திருமண இடம் மாறியது ஏன்?

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் நாளை (ஜூன் 9) திருமணம் செய்து கொள்கின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடக்கிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறும்போது, ​​”எங்கள் திருமணம் திருப்பதியில் நடந்தது.

16546763712006

பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால், அங்கு நடத்துவது சிரமம் என்பது புரிந்தது. அதனால் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொள்கிறோம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. எப்போதும் ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.

‘டான்’ படத்தை தவிர்த்த உதயநிதி

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டான்’. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டார். படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன், சூரி, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ​​”படம் வெற்றி பெற்றதால், சில உண்மைகளை சொல்லலாம் என நினைக்கிறேன். இது, நான் நடிக்க வேண்டிய படம். மறுத்ததற்கு காரணம், இதில் ஸ்கூல் பகுதி ஒன்று வருகிறது. அதை என்னால் பண்ண முடியாது என்பதால் மறுத்தேன்.

16546764812006

கிளைமாக்ஸில் வரும் காட்சியையும் என்னால் சரியாகப் பண்ணியிருக்க முடியாது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். பெரிய படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளையும் விரைவில் தொடங்க உள்ளோம்” என்றார்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube