லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணனின் நடிப்பில் தி லெஜண்ட் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பல்வேறு விளம்பரப் படங்களை தயாரித்த ஜெடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். இவர்கள் கடைசியாக தமிழில் விசில் என்ற படத்தை இயக்கியிருந்தார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள 2 பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக ராய் லட்சுமியுடன், ஹீரோ சரவணன் போடும் குத்தாட்ட பாடலான வாடிவாசல், யூடியூபில் 13 மில்லியன்களை கடந்துள்ளது.
இதையும் படிங்க – ஐ.பி.எல். இறுதிப் போட்டியின்போது வெளியாகும் அமீர் கான் பட டிரெய்லர்…
இந்நிலையில் வரும் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க – தனுஷ் எங்கள் மகன் என்பதில் பின்வாங்கப் போவதில்லை – மேலூர் கதிரேசன் தம்பதி
இதையொட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா நடைபெறுகிறது.
வரிசையாக விறுவிறுப்பான நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர் #TheLegendAudioLaunch!@hegdepooja – @தமன்னா பேசுகிறார் – @இஹன்சிகா – @ஊர்வசி ரவுடேலா – @iamlakshmirai – @ஷ்ரத்தா ஸ்ரீநாத் – #ஸ்ரீலீலா – @iamyashikaanand – @நுபுர்சனோன் – @டிம்பிள் ஹயாதி#மேதை #தி லெஜண்ட் மூவி pic.twitter.com/21sOIdyrDF
— dir_jdjeryofficial (@jdjeryofficial) மே 27, 2022
இந்த விழாவில், நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரவுத்தலா, ராய் லட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ லீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்கின்றனர்.
தி லெஜண்ட் படத்தின் பாடல்களைப் பாருங்கள்…
இவர்களில் சிலர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகைகள் என்பதால், கோலிவுட்டின் பார்வை தற்போது தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா பக்கம் திரும்பியுள்ளது.
பான் இந்தியா படமாக தி லெஜண்ட் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.