ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ படம் தேர்வாகியுள்ள நிலையில், “என்னுடைய ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ (கடைசி திரைப்படக் காட்சி) குடும்பத்தினரே.. மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம்” என படத்தின் இயக்குநர் பான் நலின் தெரிவித்துள்ளார்.
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விருதுக்கான வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட திரைப்படம் ‘தி ‘செல்லோ ஷோ’. பான் நலின் இயக்கியுள்ள படம் விருது பெரும் என பலரும் நம்பியிருந்த நிலையில், நேற்று வெளியான ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் படத்தின் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், படம் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பரிந்துரையில் இடம்பெறாதது குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள படத்தின் இயக்குநர் பான் நலின் ட்விட்டர் பக்கத்தில், “ஹே.. என்னுடைய ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ'(கடைசி திரைப்பட நிகழ்ச்சி) குடும்பத்தினரே.. மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம். ஒரு குழுவாக நீங்கள் மிகவும் அற்புதமான செயல்பட்டீர்கள். பல்வேறு தடைகளிலும் நீங்கள் நம் கதையின் பக்கமே உறுதியாக இருந்தீர்கள். அது தான் உலகெங்கிலும் உள்ளவர்களின் இதயங்களை கவர்ந்தது. ஏன்னா படத்தை எடுக்கும்போது நம் அனைவருக்கும் தெரியும் இது கடைசி படமாகவோ, கடைசி காட்சியாகவோ இருக்காது” என பதிவிட்டுள்ளார்.