உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷாந்தனு ‘வாழ்க்கை நிச்சயமற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணா பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு குறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டு உள்ளார். அந்தப்பதிவில், “நேற்றிரவு ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஆர்வமுள்ள, மிகவும் திறமையான உதவி இயக்குநர். 26 வயது… எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை.. ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்றார். அவர் வேலையின் போது இறந்துவிட்டார்.