lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இணையப்போகும் பிரபல நடிகர்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! – லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான்


தமிழ் சினிமாவில் தற்போது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்தார்.

அதைத்தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். பாடல்கள் மற்றும் நாயகி இல்லாமல் இரவிலேயே எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளித்தது.

பிரின்ஸ் படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்..வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

மேலும் இப்படத்தின் வெற்றி லோகேஷை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றது. இதைத்தொடர்ந்து தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய லோகேஷ் மாஸ்டர் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

விக்ரம் சக்ஸஸ்; கிஃப்ட் வழங்கி நெகிழ வைக்கும் கமல்!

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

படத்தின் வெற்றி கோலிவுட் திரையுலகைப் பெருமைப்படுத்தியது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு ரசிகர் உங்கள் படத்தில் மன்சூர் அலிகான் எப்போது நடிப்பார் என்று கேட்டார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் விரைவில் என் படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பார் என்றார். லோகேஷ் கனகராஜ் நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகர் என பலமுறை பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கைதி படத்திலும் மன்சூர் அலிகான் நடித்ததாக ஒரு தகவல் அப்போது பரவியது..

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விரைவில் மன்சூர் அலிகான் தன் படத்தில் நடிப்பார் என்று கூறியதால் தளபதி 67 படத்தில் மன்சூர் நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் தளபதி 67 படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube