விக்ரம்: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.! – கமலின் விக்ரம் படம் பற்றி லோகேஷ் கனகராஜ் கூறுகிறார்


கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்திற்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தை தெறிக்கவிட்டது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் கடைசி நேர ட்விஸ்டாக இந்தப்படத்தில் சூர்யா கெஸ்ட் நடித்தார்

மேலும் நான்கு வருடங்களுக்கு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘விக்ரம்’ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே குவித்து வருகிறது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தின் முதல் பாதியில் கமல் சில காட்சிகள் மட்டுமே வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. முதல் பாதி முழுவதுமே பகத் பாசில், விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகளே அதிகம் இருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “சோதனைப் படங்களையே அதிகமாகப் பண்ணி பழகியவர் கமல் சார். அவர் எனக்குக் கிடைக்கும் போது நான் அவரை மட்டுமே காட்டிட முடியாது.அதுல கொஞ்சம் சோதனையும் இருக்கணும். அவர் மட்டுமே கொண்டாடிடாம கதைக்கு கொஞ்சம் நியாயம் செய்ய வேண்டும்.

தள்ளிவிட்ட நண்பனை செருப்பால் அடித்த சன்னி லியோன்: தீயாய் பரவும் வீடியோ.!
முதல்பாதில ஒரு டயலாக்தான் சாருக்கு ‘ஆரம்பிக்கலாமா’. அத நான் சொன்னதும்தான் அவருக்கே ஸ்ட்ரைக் ஆச்சு. இரண்டாம் பாதி முழுக்க அவரை சுற்றி தான் கதை நகரும். இதுல பெரிய ரகசியம் எல்லாம் இல்ல. கமல் சார் வரப்போற இடத்த எல்லோரும் கொண்டாடனும்னு நெனச்சோம். இடைவேளைக்கு முன்பே ரசிகர்கள் கமல் சார் எண்ட்ரியா எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube