லோகேஷ் கனகராஜ் தனது கடைசி மூன்று படங்களின் கதை தொடர்பு பற்றி கூறுகிறார் – தமிழ் செய்திகள்


லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டதாக இருந்தது ஏன் என்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் காட்டப்பட்டிருக்கும். அதே போல் போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், தற்செயலாக ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு போதைப்பொருளுக்கு எதிராக அவர் திரும்புவது தான் ‘மாஸ்டர்’ படத்தின் கதையாக இருக்கும். மேலும் ‘விக்ரம்’ படத்தின் கதையிலும் போதைப்பொருள் தான் படத்தின் மையக்கரு என்பது குறிப்பிடத்தக்கது.

vikram sucessmeet 09062022m1

இந்த நிலையில் மூன்று படங்களிலும் போதை பொருள் சம்பந்தப்பட்ட கதை ஏன் என்பது குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்த போது ‘இது சமூக அக்கறையின் காரணமாக நான் இயக்கும் படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்களாக அமைந்து விடாமல் சமூக அக்கறையுடன் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

கமல்ஹாசன், விஜய் போன்ற பெரிய ஸ்டார்கள் பேசினால் போதைப்பொருளுக்கு எதிராக ஒரு சமூகம் உருவாக வாய்ப்பு உண்டு என்றும் போதைப்பொருளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube