பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார்.
ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து வெளிவந்த நிலையில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் அமெரிக்க திரைப்படக்கல்லூரியில் படித்தவர். தந்தையை போல நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநராக உள்ளதாக அறிவித்துள்ளார். வெப் சீரீஸ் எடுப்பதற்காக கதை ஒன்றை எழுதி முடித்துள்ள ஆர்யன், விரைவில் அதனை இயக்குவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.