மகேஷ் பாபு: திடீரென்று எல்லாமே போய்விட்டது: மறைந்த தந்தை குறித்து மகேஷ் பாபு உருக்கம்.! – மகேஷ் பாபு தனது மறைந்த தந்தை பற்றி உணர்ச்சிகரமான அறிக்கை


தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 79 வயதாகும் கிருஷ்ணாவின் மறைவிற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மறைந்த தனது தந்தை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ்பாபு, தொடர்ந்து தனது குடும்பத்தினரை இழந்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் அவரது அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார். இதையடுத்து மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது மூப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அவரது தந்தையும் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது மகேஷ் பாபு தனது தந்தையின் மறைவு குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவில், “நீங்கள் வாழும்போது உங்களைக் கொண்டாடுகிறார்கள்.

Thalapathy 67: அறிவிப்புக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘தளபதி 67: ஆச்சரியத்தில் கோலிவுட்.!

இதுவே உங்கள் மகத்துவம். தைரியமும் துணிச்சலும் உங்கள் இயல்பிலேயே உள்ளது. நான் பார்த்த அனைத்தும் திடீரென்று போய்விட்டது. என்னுள் இதுவரை இல்லாத ஒரு வலிமையை இப்போது உணர்கிறேன். மேலும் பயமின்றி இருக்கிறேன். உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது பிரகாசிக்கும்.

சிவகார்த்திகேயன்: தளபதிக்கு ‘அரபிக்குத்து’.. அப்போ ஏகேவுக்கு: பரபரக்கும் சோஷியல் மீடியா.!

ஆனால், இப்போது எனக்கு எந்தப் பயமும் இல்லை. உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது ஒளிரும். மேலும் உங்களை பெருமை அடையச் செய்வேன். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். லவ் யூ நான்னா…மை சூப்பர் ஸ்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube