மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த படம் ‘ரோர்சாக்’ (Rorschach). சாதாரணக் கதை என்றாலும், நான் லீனியர் முறையில் சைக்காலஜிக்கல் த்ரில்லராக திரைக்கதையாக வெளியாகி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் படத்தில் ‘கெட்டியோலானு எந்தன் மாலாக்கா’ படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆசீஃப் அலி, கிரேஸ் ஆண்டனி எனப் பலர் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது.
இதில் கலந்துகொண்ட நடிகர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மலையாள சினிமாவின் இளம் நடிகர்களுள் ஒருவரான ஆசீஃப் அலி மேடையேறிய போது மம்முட்டியும் மேடையேறினார். ஆசீஃப் அலியின் நடிப்பை பாராட்டி பேசிய மம்முட்டி, “இந்தப் படத்தின் புரோமோஷன் சமயத்தில் துபாய் சென்றபோது ‘விக்ரம்’ பட வெற்றிக்காக சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்தார் என்ற செய்தி வந்தது. விக்ரம் படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. இதைப் பார்த்த ஆசீஃப் அலி என்னிடம் ரோலக்ஸ் கடிகாரம் வாங்கி தர வேண்டும் என கேட்டார்” கூறியவர், சர்ப்ரைசாக ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்து அசத்தினார். இந்தக் காட்சிகள் இப்போது வைரலாகி வருகின்றன.
• @மம்முக்கா பரிசுகள் ஏ #ரோலக்ஸ் பார்க்கவும் #ஆசிபாலி Rorschach வெற்றி கொண்டாட்டத்தில்
கமல் சார் ரோலக்ஸ் வாட்சை பரிசளிப்பது போல் ஆசிஃப் அலி ரோலக்ஸ் வாட்ச் கேட்கிறார் என்று மம்முகா குறிப்பிட்டுள்ளார். @Suriya_offl நா @dulQuer #சூர்யா42pic.twitter.com/925NNPlEI8
— யுவன் குமார் (@Virat_Yuvan) டிசம்பர் 7, 2022