டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை.. மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான்..


ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர் அசோசியேசன் என் தேசிய அளவிலான அமைப்பு கடந்த மே மாதம் விற்பனையான கமர்ஷியல் வாகனங்கள் குறித்த விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 66,632 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2021 மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 17,607 வாகனங்கள் அதிகமாகும். இந்த தகவல் இந்தியாவில் மொத்தம் உள்ள 1616 ஆர்டிஓ அலுவலகத்தில் 1481 அலுவலகத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விபரங்களைப் பெற்றது மூலம் கிடைத்த தகவல் ஆகும்.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களைப் பொருத்தவரை மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது LCV- இலகுரக கமர்ஷியல் வாகனங்கள், MCV – மத்தி ரக கமர்ஷியல் வாகனங்கள், HCV- ஹெவி கமர்ஷியல் வாகனங்கள் கடைசியாக கட்டுமான மிஷின்கள் கொண்ட வாகனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ரகத்தையும் மொத்தமாகச் சேர்த்தே கமிர்ஷியல் வாகனங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த கமர்ஷியல் வாகன பிரிவில் டாடா நிறுவனம் தான் ஆட்சி செய்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த ஒட்டு மொத்த விற்பனையில் டாடா நிறுவனம் 41.35 சதவீத மார்கெட் பங்கைப் பிடித்துள்ளது.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

அந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தமாக 27,553 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021 மே மாதம் வெறும் 7,373 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் 273.70 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. டாடா நிறுவனம் கமர்ஷியல் வாகன பிரிவில் மத்தி மற்றும் ஹெவி ரக கமர்ஷியல் வாகனங்களாக பிரைமா என்ற லாரி, இன்டர்சிட்டி கோச், டார்மேக் கோச் என் பஸ்கள் ஆகியன உள்ளது. இது போக வென்ட்சூயர், ஏஸ், பள்ளிகளுக்கான பஸ்கள், ஏஸ் எலெக்ட்ரிக் ஆகிய வாகனங்களை டாடா நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களாக பராமரித்து வருகிறது.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 14,739 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021 மே மாதம் வெறும் 3,372 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 337.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மார்கெட்டில் இந்நிறுவனம் மொத்தம் 22.12 சதவீத பங்கை வகித்துள்ளது.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது அசோக லேலேண்ட் நிறுவனம். இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 10,391 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இதுவே கடந்த 2021 மே மாதம் வெறும் 2792 வானகங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 272.17 சதவீத வளர்ச்சியாகும். அடுத்த இடத்தில் விஇ கமர்ஷியல் வாகன நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 4,528 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் ஒரே ஆண்டில் 387.93 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

அடுத்தாக மாருதி நிறுவனம் இந்நிறுவனம் மொத்தம் 3,027 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு மே மாதம் வெறும் 887 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 241.26 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் டைம்லர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு மொத்தம் 1,161 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஒரே ஆண்டில் இந்நிறுவனம் மொத்தம் 160.31 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

பட்டியலில் 7வது இடத்தில் ஃபோர்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1,141 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் ஒரு ஆண்டில் 78.56 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. 8வது இடத்தில் இஸூசூ நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் மொத்தம் 860 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஒரே ஆண்டில் இந்நிறுவனம் 599.19 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

டாடாவை இங்கும் வீழ்த்த ஆளில்லை . . . மாருதி எல்லாம் இங்க டம்மி பீஸ் தான் . . .

இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையை மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது ஃபோர்ஸ் மற்றும் இஸூசூ ஆகிய நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube