நடிகை மீரா மிதுன்
பிரபல மாதலும் நடிகையுமான மீரா மிதுன் 8 தோட்டங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என்னங்க சார் உங்க சட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் மீரா மிதுன்.
சம்பளம் கம்மி… ஆனா ஈசிஆரில் ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை… கொளுத்திப்போட்ட பயில்வான்!
பிக்பாஸ் சீசன் 3

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதில் சக போட்டியாளர்களுடன் எப்போதும் சண்டை சச்சரவு என இருந்து வந்த மீரா மிதுன், ஒரு கட்டத்தில் இயக்குநர் சேரன் தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
பாடகி கேகே: கச்சேரியின் போது மைக்கிலேயே அதை கூறிய கேகே… மரணத்திற்கு காரணம் இதுவா?
குறும்படம்

ஆனால் அவர் சொல்வது பொய்யென குறும்படம் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். அதன்பிறகு தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து வந்தார்.
கைதான மீரா மிதுன்

இதனால் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளானார் மீரா மிதுன். சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மீரா மிதுன் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு கதறலுடன் பேட்டியளித்துள்ளார்.
பாடகர் kk: பாடகர் கேகேவின் தலையில் காயம்.. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீஸ்!
தற்கொலை முயற்சி

அதில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் அதிகமானதாக கூறியுள்ள மீரா மிதுன், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தனக்கு தற்கொலை எண்ணம் வர காரணம் இந்த சமுதாயம்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள மீரா மிதுன், இந்த சமுதாயம் தன்னை வாழ விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சாப்பாட்டுக்கு காசு இல்லை

எத்தனை முறை ஜெயிலுக்கு போவது என்றும் தற்போது கோர்ட்டுக்கு சென்று கையெழுத்து போடக்கூட தன்னிடம் காசு இல்லை, வழக்கறிஞருக்கு கொடுக்கக்கூட பணம் இல்லை என்றும் கதறியுள்ளார். தன்னை வீட்டில் சேர்த்துகொள்வதில்லை என்றும் தனக்கு தங்குவதற்கு வீடு சாப்பிட சாப்பாடு கூட இல்லை என்றும் அழுதுள்ளார் மீரா மிதுன். இந்தியாவுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் பல சாதனைகளை படைத்த தனக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கேட்டுள்ள மீரா மிதுன் தான் இறந்த பிறகு தன் சாதனையை வெளியே வரும் என்றும் விரக்தியாக கூறியுள்ளார்.
நிற்க நிற்க அடிக்கிறாங்க

தற்கொலைக்கு முயன்ற தன்னை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக கோர்ட், கேஸ், ஜெய் என அலைந்து கொண்டிருப்பதாகவும், தான் நிற்க நிற்க தன்னை அடிப்பதாகவும் கதறியுள்ளார். மேலும் தான் சந்தித்த பிரச்சனைகளை வேறு யாராவது சந்தித்தால் இவ்வளவு ஸ்ட்ராங்காக இருப்பார்களா என்று தெரியவில்லை என்றும் கண்ணீர் விட்டுள்ளார் மீரா மிதுன்.