கேண்டர்பரியில் நடைபெற்ற 4 நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 433 ரன்கள் விளாசியது. வாண்டர் டசன் 75, காயா ஜோண்டோ 86, கைல் வெரைன் 62, மார்க்கோ யான்சென் 54 என பிரமாதமாக ஆடினர்.
ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, இங்கிலாந்து லயன்ஸ் அணி, என்னா அடி என்பது போல் டி20 கிரிக்கெட் போல் பயங்கரமாக ஆடியது. அந்த அணியின் ஹாரி புரூக் 170 பந்துகளில் 16 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 140 எடுக்க, ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை விளாசிய அதே பென் டக்கெட் 168 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 145 ரன்கள் எடுக்க, சாம் பில்லிங்ஸ் 92 ரன்கள் விளாசினார், கிரெய்க் ஓவர்டன் 21 ரன்களில் 42, 417 இங்கிலாந்து. 5.74. என்ன அடி இது? வேடிக்கை என்னவெனில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் பார்ட் டைம் பவுலர் அய்டன் மார்க்ரம் 16 ஓவர் 91 ரன் 6 விக்கெட்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா தன் 2வது இன்னிங்சி 183 ரன்களுக்கு சுருண்டது. சாம் கானர்ஸ் என்ற 23வயது வேகப்பந்து வீச்சாளர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி கண்டது.
இங்கிலாந்து கோச் பிரெண்டன் மெக்கல்லம் வழிகாட்டுதலில் இங்கிலாந்து லயன்சே இந்த அடி அடிச்சுதுன்னா, இங்கிலாந்திடம் தென் ஆப்பிரிக்கா என்ன ஆகும் என்கிறார் மைக்கேல் வான்.
“இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய விதம் மற்றும் லயன்ஸ் அணி ஆடிய விதம் பார்க்கும் போது நிச்சயம் இங்கிலாந்து அதிரடி ஆட்டமே ஆடும் என்று தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவும் தகுந்த திட்டமிடுதலுடன் இறங்க வேண்டும். பவுலிங்கில் தென் ஆப்பிரிக்கா தடுப்பு உத்தியுடன் ஆடக்கூடாது. இங்கிலாந்து தானாகவே அவுட் ஆகும் என்று ஆடக்கூடாது” என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, லயன்ஸ் அணியின் ரன் ரேட் 5.74. இதுவே தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய அதிர்ச்சியளித்திருக்கும். இங்கிலாந்து 80 ஓவர்கள் ஆடினால் 350. தென் ஆப்பிரிக்கா 60 ஓவர்களில் இங்கிலாந்தை சுருட்ட வேண்டும், என்கிறார் மைக்கேல் வான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.