மின்சார அமைச்சகம் ஆட்சேர்ப்பு 2022 | மின்சக்தி அமைச்சகத்தில் வேலை … ரூ.2,25,000/- சம்பளம் – விண்ணப்பிக்க 1 நாள் மட்டுமே உள்ளது


மின்சக்தி அமைச்சகம் (Ministry of Power India) இந்திய அமைச்சகங்களில் ஒன்று. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, மேலும் மின்உற்பத்தி, எடுத்துச் செல்லுதல், விநியோகித்தல் மற்றும் பராமரிப்பு செய்தல் போன்றவற்றை மேற்பார்வையிடுதலுக்கு பொறுப்பாகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://powermin.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம் / துறை மின்சார அமைச்சகம்
காலியாக உள்ள வேலையின் பெயர் நீதித்துறை உறுப்பினர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/06/2022
சம்பள விவரம் மாதம் ரூ.2,25,000/-
கல்வித் தகுதி விவரம்

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக இருந்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை

வயது, கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் செய்யப்படுவார்கள்.
மொத்த காலிப்பணியிட விவரம் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன் முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள் https://powermin.gov.in/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1Q0w3m3zKcH80MtY672Pe8jX7j3kyL4XH/view

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube