புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி… விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ‘புக்’ பண்ணீருவீங்க!

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பிரபலங்கள் பலரும் கூட ராயல் என்பீல்டு பைக்குகளின் ரசிகர்களாக உள்ளனர். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியும் (Mohammad Shami) ஒருவர்.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இவர் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். முகமது ஷமி வாங்கியிருப்பது ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) பைக் ஆகும். இது ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படும் பைக்குகளில் ஒன்றாகும். மற்றொன்று ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) ஆகும்.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இந்த 2 பைக்குகளில், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை முகமது ஷமி தேர்வு செய்துள்ளார். ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில், 648 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47.65 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள்தான் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிலும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

பிரேக்கிங்கை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்படுகிறது. டிசைனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 என 2 பைக்குகளுமே ரெட்ரோ ஸ்டைலில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இதன்படி இந்த 2 பைக்குகளிலும் ஹாலோஜன் ஹெட்லைட்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் விற்பனை தற்போது இந்திய சந்தையில் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி அவை மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளன.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் ஆரம்ப விலை 3.06 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 3.32 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த பைக்கின் வெற்றிக்கு இந்த விலை நிர்ணயமும் கூட முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

மறுபக்கம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் ஆரம்ப விலை 2.86 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 3.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த பைக்கிற்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் சவாலான விலையைதான் நிர்ணயம் செய்துள்ளது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

முகமது ஷமி தற்போது வாங்கியுள்ள ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை விட சற்றே விலை உயர்ந்தது. தன்னுடைய புதிய பைக்குடன் தான் இருக்கும் புகைப்படங்களை முகமது ஷமி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பைக்கை தனது ‘புதிய க்ரூஸிங் பார்ட்னர்’ என முகமது ஷமி வர்ணித்துள்ளார்.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய முகமது ஷமி... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இந்த புகைப்படங்களை முகமது ஷமி வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் பலர் லைக் செய்து விட்டனர். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நடராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்குடன் முகமது ஷமி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube