சட்டவிரோத யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் மோகன்லால் விசாரணை – தமிழ் செய்திகள்


பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 யானைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம்வரும் நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள வீட்டில் ஒரு ஜோடி யானையை கைப்பற்றிய அதிகாரிகள். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இதுதொடர்பான ஆவணங்களை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

mohanlallephantddsv

இதையடுத்து பெரும்பாவூர் வனத்துறை அதிகாரிகள் நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் தொடர்பாக பெரும்பாவூர் முதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் கேரள அரசு நடிகர் மோகன்லால் மீதான இந்த வழக்கை வாபஸ் பெறலாம் என்கிற ரீதியில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்குச் சாதகமாக கேரள அரசு அளித்திருக்கும் மனுவை எதிர்த்து ஜேம்ஸ் மேத்யூ, ஏ.ஏ.புவலோஸ் எனும் இருநபர்கள் புது மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நேற்று பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசு சமர்பித்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் யானைகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருப்பது கேரள குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube