நாக சைதன்யா: தப்பா பேசாதீங்க.. நந்தமுரி பாலகிருஷ்ணாவை விளாசிய சம்முவின் மாஜி கணவர்! – நந்தமுரி பாலகிருஷ்ணாவை சாடிய நாக சைதன்யா


பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா மூத்த நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நந்தமுரி பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் மறைந்த நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்டி ராமா ராவ்வின் மகன் ஆவார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நந்தமுரி பாலகிருஷ்ணா, 62 வயதிலும் ஹீரோவாக அதகளம் செய்து வருகிறார். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றன.
Keerthy Suresh: இது வேறயா… கீர்த்தி சுரேஷ் குடும்பத்தில் ஒருத்தரான விஜய்… இந்த விஷயம் தெரியுமா?

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

பாலகிருஷ்ணா சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஆக்டிவாக உள்ளார். சினிமா மூலம் எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு சர்ச்சைகள் மூலமும் பிரபலமானவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தன்னோடு போட்டோ எடுக்க விரும்பும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை தாக்குவது, இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமின்ற ஹாலிவுட் பிரபலங்களையும் தரக்குறைவாக தாக்கி பேசுவது என அவர் சிக்கிய சர்ச்சைகள் ஏராளம். ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானையே யார் என்று தெரியாது என்று கூறிய பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது எல்லாம் தன் தந்தையின் கால் தூசுக்கு சமம் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

Raadhika Sarathkumar: 59 வயசுன்னா நம்புற மாதிரியா இருக்கு.. அசரடிக்கும் ராதிகா!

நடிகையுடன் சரக்கு..

நடிகையுடன் சரக்கு..

இந்நிலையில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் சமீபத்தில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது. சக்கைப்போடு போட்ட படம் வசூலையும் வாரிக் குவித்தது. படத்தின் சக்ஸஸ் பார்ட்டில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகை ஹனி ரோஸுடன் ஸ்டைலாக சரக்கடித்த போட்டோ வெளியாகி பரப்பை கிளப்பியது. இந்நிலையில் வீர சிம்ஹா ரெட்டி படத்தின் வெற்றி விழாவில் பாலகிருஷ்ணா பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Ajith, Thunivu: அடுத்தடுத்து டேமேஜ்ஜா இருக்கே… பாவம்தான் அஜித்!

அக்கினேனி தொக்கினேனி…

அக்கினேனி தொக்கினேனி...

அந்த விழாவில், என் அப்பா என்டி ராமாராவ் காலத்தில் அந்த ரங்கா ராவ், இந்த ரங்கா ராவ், அக்கினேனி தொக்கினேனி என சிலர் விமர்சித்திருந்தார் பாலகிருஷ்ணா. பால கிருஷ்ணாவின் இந்த பேச்சை கேட்ட பலரும், ஒரு மூத்த நடிகர் பொறுப்பே இல்லாமல் இப்படி பேசலாமா, இது ரொம்பவே தவறான விஷயம் என நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் அக்கினேனி நாகேஷ்வர ராவ்வின் குடும்பத்தினரும் பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும்.

Radha Ravi: வில்லன் நடிகரா இருந்தாலும்… குழந்தை மனசுங்க ராதாரவிக்கு!

நாக சைதன்யா கண்டனம்

நாக சைதன்யா கண்டனம்

நடிகர் நாகார்ஜூனாவின் மகன்களான நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் தங்களின் சமூக தள பக்கத்தில் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதில் நடிகர் நாக சைதன்யா பதிவிட்டிருப்பதாவது, என்டி ராமா ராவ் காரு, அக்கினேனி நாகேஷ்வர ராவ் காரு மற்றும் எஸ் வி ரங்கா ராவ் காரு ஆகியோரின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் உள்ளது. அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே அவமானப்படுத்துவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளார். நாக சைதன்யாவின் இந்த பதிவுக்கு தெலுங்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிரேம்ஜி பொண்டாட்டி பத்தி இது தெரியுமா?

நாக சைதன்யா டிவிட்

நந்தமுரி பாலகிருஷ்ணா

நந்தமுரி-பாலகிருஷ்ணாSource link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube