வெங்கடேஷுக்கு ஸ்கிரிப்ட் பிடிக்கவில்லையாம். இந்நிலையில் புது ஐடியாவுடன் வெங்கடேஷை அணுகியிருக்கிறார் தருண் பாஸ்கர். ஆனால் அவரோ, இந்த படம் எனக்கு செட்டாகாது, நாக சைதன்யாவை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதையடுத்து நாக சைதன்யாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தருண் பாஸ்கர் இயக்கும் படத்தை சுரேஷ் பாபு தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளாராம்.
நாக சைதன்யா இன்னும் முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்கவில்லை. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. அந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்குகிறது.
மேலும் பரசுராம் இயக்கத்திலும் நடிக்கிறார் நாக சைதன்யா. இந்த இரண்டு பட வேலையையும் முடித்துவிட்டு தான் தருண் பாஸ்கர் படத்தில் நடிக்க முடியும்.
இதை தவிர்த்து விக்ரம் குமார் இயக்கத்தில் தூதா வெப்தொடரிலும் நடித்து வருகிறார் நாக சைதன்யா. அவர் நடித்திருக்கும் தேங்க் யூ படம் ஜூலை 8ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. அந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார்.