மருத்துவப் படிப்புகளுக்கு பாகிஸ்தான் செல்ல வேண்டும்- தேசிய மருத்துவ ஆணையம் – News18 Tamil


யுஜிசி, ஏஐசிடிஇ-வைத் தொடர்ந்து, மருத்துவ உயர்கல்வி படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,  ” பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி பெற விரும்பும்,  இந்திய பிரஜைகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும், FMGE எனப்படும் தணிக்கை பரிசோதனை தேர்வில் தோன்றவும், வேலை வாய்ப்பினை பெற தகுதியற்றவர்களாவார். இருப்பினும், 2018 ஆண்டிற்கு  முன்போ அல்லது அதற்குப் பிறகோ பாகிஸ்தானில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெட்ரா மாணவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு பின் இந்தியாவில் பணி செய்ய தகுதியுடைவர்களாக கருதப்படுவர்.

இருப்பினும், அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்டம் பெற்று இந்தியாவுக்கு குடிபெயர்ந்து குடியுரிமை பெற்ற மாணவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு பின் இந்தியாவில் பணி செய்ய தகுதியுடைவர்களாக கருதப்படுவர்” என்று தெரிவித்தது.

சில தினங்களுக்கு முன்னதாக, உயர்கல்வி படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழிநுட்ப கல்வி குழுமமும் மாணவர்களுக்கு பரிந்துரைத்தன. தேசிய மருத்துவ ஆணையமும்  தற்போது அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஜிசி, ஏஐசிடிஇ அறிவிப்பை கடுமையாக சாடிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், “ அறிவிப்பு தொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்தியாவின் பாரபட்சமான விதிமுறைகள் விவரிக்க இயலாத வகையில் உள்ளது.  இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பாஸ்கிதானும் உரிய வகையில் செய்ல்படும்” என்று தெரிவித்தார்.

வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள், அங்கு மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற பின்னர் இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து மருத்துவம் பார்ப்பதற்கு, (FMGE) எனப்படும் தணிக்கை பரிசோதனை தேர்வில் தகுதி பெற வேண்டும்.

இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள், 2018 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர், இந்தியாவுக்கு வெளியே எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் கல்வி பயில நீட் தேர்வில் தேர்ச்சி  பெற வேண்டும் என்று மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube