நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண செலவு மற்றும் வருமானம் – தமிழ் செய்திகள்


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்று கருதப்பட்ட நிலையில் அவரது திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட அவர் செலவு செய்யவில்லை என்றும் அது மட்டுமின்றி அவருக்கு இந்த திருமணத்தால் 25 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் தனது திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு புக் செய்த நயன்தாரா வங்க கடலின் ஓரத்தில் ஒரு கண்ணாடி மாளிகை போன்ற செட்டை அமைத்தார். அந்த கண்ணாடி மாளிகையில் தான் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் நடந்தது.

wedding naya vignesh09062022m

மேலும் ஒரு நபருக்கு 3500 ரூபாய் மதிப்புள்ள விருந்து சாப்பாடு, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட மேக்கப் மேன்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் என கோடிக்கணக்கில் செலவானதாக கூறப்படுகிறது.

wedding naya vignesh09062022m1

ஆனால் அதே நேரத்தில் இந்த திருமணத்தின் மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது என்றும், அதுமட்டுமின்றி நயன்தாராவுக்கு கூடுதலாக அந்நிறுவனம் 25 கோடி ரூபாய் தந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

wedding naya vignesh09062022m3

அதற்கு பதிலாக நயன்தாராவின் திருமணத்தை முழுவதுமாக வீடியோ எடுத்து தனது ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே தான் நயன்தாராவுக்கு திருமண செலவாக ஒரு ரூபாய் கூட செலவாகவில்லை என்பது மட்டுமின்றி 25 கோடி வருமானமும் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube