நயன்தாரா பாலிவுட் திரையுலகில் ஷாருக்கானுடன் இணைந்து திரையுலகில் அறிமுகமானார்


பாலிவுட் படத்தில் நேரடியாக நடிக்கவுள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஷாரூக்கான்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் கதாநாயகியாக நடித்த ஒரே நடிகை என்ற பெயரைப் பெற்றவர் நயன்தாரா.

குறிப்பாக ரஜினியுடன் அண்ணாத்த, தர்பார், குசேலன், சந்திரமுகி, சிவாஜி என 5 படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் பிகில், சிவகாசி, வில்லு என 3 படங்களிலும், அஜித்துடன் ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் என 4 படங்களிலும் நயன்தாரா ஃபீமேல் லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க – நயன்தாரா முதல் நஸ்ரியா வரை! திருமணம் ஆகும் போது நடிகைகளுக்கு என்ன வயது தெரியுமா?.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டானதால் நயன்தாராவின் மார்க்கெட் எப்போதும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் நயன்தாரா தற்போது முதன்முறையாக பாலிவுட்டில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் நயன்தாராவுக்கு ஜோடியாக அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாரூக்கான் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைத்துள்ளனர்.

தமிழில் மெர்சல், தெறி, பிகில் என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீ இந்த படத்தை இயக்கியுள்ளார். திரையுலகில் 18 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும், தனக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தை சரியாக தேர்வு செய்து ஒவ்வொரு படங்களிலும் முத்திரை பதித்துள்ளார்.

இதையும் படிங்க – திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய நட்சத்திர ஜோடி

இதற்கு உதாரணமாக அறம் படத்தில் அவர் கலெக்டராக நடித்ததை குறிப்பிடலாம். இந்நிலையில் முதன்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறார். நயன்தாரா.

ஜவான் படத்தில் நயன்தாராவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தப் படம் மெகா ஹிட்டானால், தொடர்ந்து நயன்தாரா இந்தி படங்களில் நடிக்கலாம்.

இதையும் படிங்க – நயன்தாரா முதல் நஸ்ரியா வரை! திருமணம் ஆகும் போது நடிகைகளுக்கு என்ன வயது தெரியுமா?.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திய என 5 மொழிகளில் உருவாகும் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube