நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: 18,000 குழந்தைகளுக்கு விருந்து | நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நாளில் தமிழகத்தில் 18000 குழந்தைகளுக்கு மதிய உணவு…


விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 1 லட்சம் பேருக்கு திருமண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்தனர்.

மேலும், 18,000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரத்யேகமாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் #Nayanthara #Nayantharawedding ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்” எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்றது.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube