உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ரசிகர்கள் கூட கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியானது. இந்தப்படத்தின் ரிலீசுக்காக தான் தங்களின் திருமணம் தள்ளி போனதாக ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் விரைவில் திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து மகாபலிபுரத்திற்கு இவர்களின் திருமணம் மாற்றப்பட்டது. திருமணத்திற்கு கிட்டத்தட்ட 200 பேர் வருவார்கள், அதுவும் பலரும் விஐபி என்பதால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம் என்பதால் தான் திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது.
சிம்புவை பின்பற்றி சமந்தா செய்யப் போகும் காரியம்: இதென்னப்பா புது ட்விஸ்ட்.!
ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வின் வீடியோ உரிமையை ஒரு பிரபல ஓடிடிக்கு ஒரு பெரிய தொகைக்கு வாங்கியதால், அவர்கள் இந்த திருமண நிகழ்வை கலர்புல்லாக காட்ட பிளான் போட்டுள்ளனர். இதன் காரணமாகவே இவர்களின் மகாபலிபுரத்திக்கு மாற்றப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.