nayanthara: ‘யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல்’ நயன்தாரா கல்யாணம் நடந்துள்ளது… சாடிய பிரபல நடிகர்! – விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன்


சினிமா நடிகர்கள் நடிகைகள் தொடர்பான செய்திகளை வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். அவர் வெளியிடும் வீடியோக்களில் பெரும்பாலும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களே இருக்கும்.

நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசுகிறார் என அவர் மீது திரைத்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் பயில்வான் ரங்கநாதன். அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகைகள் குறித்து பேசுவேன் என அதிரடியாக கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் என்றும் விடாப்பிடியாக கூறியுள்ளார். அதோடு நடிகர் நடிகைகள் குறித்து தான் பேசுவரை கேட்க 3 லட்சம் பேர் உள்ளனர்.

நடிகர் நடிகைகள் குறித்து பேசுமாறு பொதுமக்கள் முதல் போலீஸ் வரை சொல்கிறார்கள் என அசராமல் கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என பாடகியும் பிக்பாஸ் பிரபலமுமான சுசித்ரா சமீபத்தில் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube