nayanthara: Nayanthara: திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக விக்கி நயன் பிரஸ்மீட்… என்ன சொல்லியிருக்காங்க பாருங்க! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர்


நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்ட சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற இந்தத் திருமணத்தில் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண விழாவை ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியதால் திருமணத்திற்கு மீடியாக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீடியாக்களை அனுமதித்தால் திருமணம் குறித்த போட்டோக்களும் லீக்காகும் என்பதால் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை.
நடிகைகளோட அந்தரங்க வீடியோக்கள் இருக்கு… பேசுறீங்களா? பயில்வானிடம் பேரம் பேசிய பிரபலம்!

திருமணம் முடிந்த கையோடு நேற்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதி சென்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் பிரஸ் மீட் நடைபெற்றது.
நயன்தாரா: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இத்தனை வயசு மூத்தவரா… தேடிப் பார்க்கும் நெட்டிசன்ஸ்!
நயன்தாரா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், மஞ்சள் நிற சேலையிலும் விக்னேஷ் சிவன் ஃபார்மல் பேண்ட் ஷர்ட்டில் வந்திருந்தனர். முதலில் பேசிய நடிகை நயன்தாரா பிரஸ் மீட்டிற்கு வந்ததற்கு நன்றி என்று கூறினார். இவ்ளோ நாள் நீங்க கொடுத்த ஆதரவு பெரியது, இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இனிமேலும் உங்கள் ஆதரவு ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறி நன்றி தெரிவித்தார்.

நயன்தாரா: கையைப் பிடித்து இழுத்த நபர்… திரும்பிப் பார்த்து முறைத்த நயன்… திருப்பதியில் திடுக்!
இதனை தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், இந்த ஹோட்டலில் தான் முதன் முதலில் நயன்தாராவை கதை சொல்வதற்காக சந்தித்தேன். தற்போது இங்கே பிரஸ் மீட் கொடுக்கிறோம் என்றார். மேலும் செய்தியாளர்களை சாப்ட்டிங்களா என்று நலம் விசாரித்த விக்கி, எங்களின் திருமணத்திற்கு உங்கள் ஆசீர்வாதம் தேவை. எங்களுடைய புரஃபஷ்னல் கெரியருக்கும் உங்களுடைய ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை என்றார்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube