நயன்தாரா விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கடிதம் வைரலாகும் – தமிழ் செய்திகள்


இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று முன்தினம் திருமணம் செய்தவுடன் நேற்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசித்த பின் கோவிலுக்கு வெளியே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காலணி அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

org 64097202206101050காலணி அணிய தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருவரும் காலணி அணிந்திருந்ததால் இதுகுறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தங்களது செயலுக்காக தேவஸ்தான அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்ததாகவும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பிறகு போட்டோ ஷேட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலனி அணிந்திருந்ததை உணரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

cd9bac60 2d5c 4539 ae17 478f7b17c7d0

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube