nayanthara wedding: Nayanthara wedding: ப்பா… இத்தனை கோடிகளா… திருமணத்தால் விக்கி நயன் ஓடிடியில் கட்டிய கல்லா! – நயன்தாரா திருமணம்: நயன்தாரா திருமணம் நெட்ஃபில்க்ஸுக்கு விற்கப்பட்டது


தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுத்த பிறகே திருமணம் என முடிவு செய்தார் நயன்தாரா.

அதோடு காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி செம ஹிட்டானது. இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் என கடந்த சில மாதங்களே தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறுகிறது.

நயன்தாரா

திருமண விழாவை கவரேஜ் செய்யும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் விற்பனை செய்து அதிலும் காசு பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் எத்தனை கோடி ரூபாய்க்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் திருமண விழா கவரேஜ்ஜை உரிமை விற்பனை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம்: ஹேப்பி மோடில் ஆண்டவர்… லோகேஷை தொடர்ந்து சூர்யாவுக்கும் அசத்தல் கிஃப்ட்!
அதன்படி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண விழாவை 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். இதனை இயக்குநர் கவுதம் மேனன்தான் காட்சியாக்கி கொடுக்கிறாராம். மேலும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube