NEET | நீட் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு


2022 நீட் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 15-05-2022 இரவு 11.50 மணி வரை .

முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2022 நீட்  தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6ம்  தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது.மேலும், நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, நீட் தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆண்டிற்கு பல முறை நடத்தப்படும் ஜே.இ.இ  பிராதான தேர்வு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மாணவர்கள், ” 2021 நீட் தேர்வு நுழைவுத் தேர்வுக்கான கலந்தாய்வு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது.இந்த, பொது  கலந்தாய்வில் நிரப்பப்படாத  323 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் (Stray Vacancy Round Counselling)  ஏப்ரல் 23ம் தேதியுடன் நிறைவடைந்ததது. எனவே, இரண்டு காலந்தாய்விலும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் 2022 நீட் தேர்வுக்கு தயார் செய்வது கடினமாகும்.

இந்திய மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் படிப்பைத் தொடர சீனா ஒப்புதல்

மேலும், 12ம் வகுப்பு சிபிஎஸ்சி வாரியத் தேர்வு ஜுலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET 2022) அடுத்தடுத்தது நடைபெற இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு போட்டி மிகக் கடுமையானதாக  இருக்கும். எனவே, மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் 2022 ஆண்டுக்கான நீட் தகுதித்  தேர்வை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர். 

மருத்துவப் படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – தேசிய மருத்துவ ஆணையம்

முன்னதாக, 2022 ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு (JEE Main) தேதியில் தேசிய தேர்வு முகமை திருத்தம் செய்தது. ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட முதலாவது பிரதான தேர்வு, ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் – காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை – தேர்வு நடைபெறும். மே மாதத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாவது பிரதான தேர்வு, ஜூலை 20ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011- 40759000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube