பொதுத் துறையைச் சேர்ந்த சோந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கடந்த முழு நிதியாண்டில் ரூ.1,152 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ். ராஜீவ் கூறியது:
வங்கி, கடந்த நிதியாண்டில் கடன் வழங்கல் மற்றும் டெபாசிட் திரட்டல் நடவடிக்கைகளில் சிறப்பான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில், 2022 மாச் இறுதி நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடன் 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,35,240 கோடியை எட்டியுள்ளது. திரட்டப்பட்ட டெபாசிட் 16.26 சதவீதம் உயர்ந்து ரூ.2,02,294 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த மதிப்பு 20 சதவீதம் அதிகரித்து ரூ.3,37,534 கோடியானது. நிகர லாபம் ரூ.550 கோடியிலிருந்து வளா்ச்சி கண்டு ரூ.1,152 கோடியைத் தொட்டது.
மொத்த வாராக் கடன் 7.23%-லிருந்து 3.94%-ஆகவும், நிகர வாராக் கடன் 2.48%-லிருந்து 0.97%-ஆகவும் குறைந்துள்ளன.
நடப்பு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபத்தை 25-30 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.