நிகர லாபம் ரூ.1,237 கோடி- தினமணி


என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.1,237 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2021-ஆம் நிதியாண்டை விட 22% அதிகமாகும்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்எல்சி இந்தியா கடந்த 2021-22-ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.10,662 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது 2020-21-ஆம் நிதியாண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.8,967 கோடியைவிட 19% அதிகமாகும். நிறுவனம் 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,237 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 22% அதிகமாகும்.
பழுப்பு நிலக்கரியை முந்தைய 2020-21-ஆம் ஆண்டைவிட 30% அதிகமாக வெட்டி எடுத்து, ரூ.824 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டது.
கடந்த நிதியாண்டில் என்எல்சி மின் நிலையங்கள் மட்டும் 2,502.20 கோடி யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து, அவற்றில் 2,204.10 கோடி யூனிட் மின் சக்தியை மின்வாரியங்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட முறையே 29% மற்றும் 32% அதிகமாகும்.
என்எல்சி குழும செயல்பாடுகள்: என்.எல்.சி.யின் துணை நிறுவனங்களையும் சேர்த்து 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.12,546 கோடி மொத்த வருவாய் ஈட்டப்பட்டது. இது முந்தைய ஆண்டின் மொத்த வருவாயைவிட 6% அதிகம். துணை நிறுவனங்களையும் சேர்த்து 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.2,603 ​​கோடி வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 17 சதவீதம் அதிகமாகும். மேலும், நிறுவனம் கடந்த நிதியாண்டில் தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 2,920 கோடி யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்து புதிய வரலாறு படைத்தது. அதேபோல, 2,589 கோடி யூனிட் மின் சக்தியை மின் வாரியங்களுக்கு விற்பனை செய்து, ஓராண்டில் அதிகபட்ச விற்பனை அளவை எட்டியுள்ளது.
மாநில மின் வாரியங்களுக்கு மின்சக்தியை விற்பனை செய்து, அதற்கான கட்டணங்களை வசூலித்ததில் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையையும் வசூலித்ததன் மூலம், கடந்த நிதி ஆண்டில் கோரப்பட்ட மின் கட்டணத் தொகையைவிட 46 சதவீதம் அதிகமாக வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக என்எல்சி தெரிவித்துள்ளது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube