“மிகவும் போற்றுதலுக்குரியது” | நயன்தாரா – விக்னேஷ் சிவன் புதுமணத் தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து | நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்


நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய 6 வருடங்களாக காதலித்து வந்தவர்கள் இன்று மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, திருப்பதியில் நடைபெறவிருந்த அவர்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவற்றில்…

ஆண் குழந்தை:

“தனக்கு ஏற்பட்ட தடைகளையும், ஏமாற்றங்களையும்,
துரோகங்களையும்,
வலிகளையும் கடந்து,
பெரிதாக சினிமா பின்னணி இல்லாமல்
தனியாய் போராடி
ஆணவம் நிறைந்த கூட்டத்தின் முன்னே
தனக்கென அரியணை அமைத்து உயர்ந்து நிற்கிறார்… நயன்தாரா”

ஈரோடு கதிர்:

“நயன்தாரா – விக்னேஷ் திருமணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு இன்று மதிய கல்யாண சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இது உண்மையாகவே இருப்பின், மிகவும் போற்றுதலுக்குரிய செயல் இது.”

மனோஜ்குமார் கோபாலன்:

“அதென்ன காதல் பிரியாணி!
அது எங்க கெடைக்கும்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விருந்து மெனு!”

நீலாம்பரி:

“என்றும் மகிழ்வுடனும்… ஆரோக்கியத்திடனும் வாழ வாழ்த்துகள்”

பாரு

“இருவரும் அழகாக உள்ளீர்கள்.. திருமண வாழ்த்துகள்”

பேரரசி (பேரரசி)

“சில பேர் எல்லாம் ஏன்னே தெரியாம நல்லா இருக்கணும்னு மனசுக்கு தோணும்ல. நயன்தாரா அந்த கேட்டகிரி எந்த அளவுல! மீதி வாழ்க்கை பூரா சந்தோசமா, சிறப்பா வாழட்டும்..”

பிரதீப்ராஜா

“மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை”

கம்யூனிஸ்ட் இஞ்சினியர்

“வாழ்த்துக்கள்.. சிறப்பான வாழ்க்கை அமையட்டும்..”

மருத்துவ மைனர்

“வாழ்த்துக்கள் விக்கி & நயன்தாரா”





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube